நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மனித நேய உதவித் திட்டம்
2024-06-26 09:43:40

இந்த ஆண்டு ஐ.நா. மனித நேய உதவித் திட்டத்திற்கு 4800 கோடி அமெரிக்க டாலர் நிதி தேவை. ஆனால், நிதி வழங்குவதற்கான காலம் ஏறக்குறைய பாதி நாட்கள் கடந்து விட்டது. நன்கொடையாளர்கள் உதவித் திட்டங்களுக்கு 800 கோடி அமெரிக்க டாலர்களை மட்டுமே வழங்கியுள்ளனர் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் ஜூன் 25ஆம் நாள் கூறினார். 

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் நடத்திய மனித நேய விவகாரத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து குட்ரெஸ் நிகழ்த்திய காணொளி உரையில் கூறுகையில்,இவ்வாண்டு ஜெனீவா பொது ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஆனால் மோதல், போரின் விதிகளை புறக்கணித்தல், கட்டுப்பாட்டில் இல்லாத காலநிலை நெருக்கடி ஆகியவை மனிதகுலத்திற்கு பயங்கரமான துன்பத்தை ஏற்படுத்துகின்றன. பசி மற்றும் வீடுவாசலின்றி ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு இந்த மனித நேய உதவியாகும் என்றார்.