கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் சீனா மீதான கவனம்
2024-06-26 15:59:13

15வது கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம் தற்போது சீனாவின் டா லியேன் நகரில் நடைபெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவு, முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பம் முதலியவை குறித்த சொற்பொழிவு மற்றும் விவாதம் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், சீனா மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பு, பன்னாட்டு விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் செயல் இயக்குநர் மிரேக் டுசெக் இது பற்றி கூறுகையில், சீனாவுடன் உண்மையான தொடர்பை ஏற்படுத்தி, சீன பொருளாதார வளர்ச்சியின் முதன்மை பணிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

2024ம் ஆண்டின் 10 புதிய தொழில் நுட்பங்கள் பற்றிய அறிக்கை, இம்மன்றக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட 10 தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் புதிய தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய புதிய தொழில்கள், புதிய முறைமைகள் மற்றும் புதிய உந்து சக்திகள், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைக் கொண்டு செல்லும் என்று பன்னாட்டு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

படம்:VCG