பிலிப்பைன்ஸ், அமெரிக்காவின் நண்பரா அல்லது கருவியா?
2024-06-26 20:20:14

தற்போது, தென்கிழக்காசிய நாடுகளுக்கு மத்தியில், பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்பை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், பிற நாடுகளின் முன்னாள் அதிகாரிகளின் கருத்துக்கள், பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகளின் நம்பிக்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மலேசியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் மகாதீர் அளித்த பேட்டியில் கூறுகையில்

தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் பங்களிப்பு மீது சந்தேகம் எழுந்ததோடு,  தென் சீனக் கடலுக்கு அருகிலுள்ள நாடுகளிடையே பகைமை நிலையை தூண்டவும், உக்ரைன் மற்றும் ரஷிய மோதல் போன்று போருக்கு செல்வதை வழிநடத்தவும் அமெரிக்கா மிகவும் விரும்புகிறது என்றும் குறிப்பிட்டார். போர் மூண்டால், அமெரிக்கா அதிக ஆயுதங்களை விற்க முடியும் என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

தென் சீன கடல் விவகாரத்திலும், சீனாவுக்கான வெளியுறவுக் கொள்கையிலும் பிலிப்பைன்ஸ் அடிப்படை தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சில முன்னாள் அதிகாரியின் கூற்று போல, பசிபிக்-ஆசிய பிராந்தியம் மற்றும் உலகளவில் தனது மேலாதிக்கம் செலுத்துவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், அமெரிக்கா தென் சீனக் கடல் விவகாரத்தில் கலந்து கொண்டதே, அமெரிக்க-பிலிப்பைன்ஸ் நட்புறவுக்காக இல்லை. மாறாக அமெரிக்கா சீனாவைத் தடுப்பதற்கான ஒரு கருவியாக பிலிப்பைன்ஸைப் பயன்படுத்தி வருகிறது.