சாங் ஏ-6 சந்திரன் மண்டல ஆய்வுக் கலத்தின் திரும்பு கலம் தரையிறங்கியது
2024-06-26 10:13:46

சாங் ஏ-6 சந்திரன் மண்டல ஆய்வுக் கலத்தின் திரும்பு கலம் ஜுன் 25ஆம் நாள் உள் மங்கோலியாவில் திட்டமிட்ட பகுதியில் தரையிறங்கியது. சந்திரனின் இருண்ட பகுதியில் எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்புவது, உலகத்தில் முதல் முறையாகும். சீனாவின் சந்திரன் மண்டல ஆய்வுத் திட்டப்பணியின் முக்கிய பகுதியாக, சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம் மே 3ஆம் நாள் ஏவப்பட்டது முதல், விண்வெளியில் 53 நாட்ளில் 7 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டராக பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.