ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும்:அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் திட்டம்
2024-06-26 15:30:16

அண்மையில் இந்திய செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, வங்காளத்தேசம், மியன்மார் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் ஒரு புதிய நாட்டை உருவாக்க சிஐஏ என்ற அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய செய்தி ஊடகத்தின் படி இப்பிரதேசத்தில் ஒரு மதம் சார்ந்த நாட்டை நிறுவ சிஐஏ திட்டமிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் மே திங்களில், மணிப்பூர் மாநிலத்தின் மத முரண்பாடு தீவிரமாகியுள்ளது. அதே வேளையில், இந்த பிரதேசத்தில் "சுதந்திரம்" பற்றிய குரலும் பெருகி வருகிறது. சிஐஏ நேரடியான தலையீட்டால், இந்தியாவில் மத முரண்பாடு தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில், தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்கா இந்தியாவில் பெரிய அளவில் ஊடுருவத் தேர்வு செய்யத் தொடங்கியது.

அமெரிக்காவும் இந்தியாவும் பல பிரச்சினைகளில் பொது மொழியைப் பகிர்ந்து கொண்டாலும், கடந்த சில ஆண்டுகளில், சில சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் கருத்துக்களை இந்தியா முழுமையாகப் பின்பற்றவில்லை. இந்தியா மீதான அமெரிக்காவின் மனநிறைவின்மை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது என்று இந்திய பிரச்சினைக்கான நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது. அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பது கொடியது என்பது குறிப்பிடத்தக்கது.