ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ப்புக்கான சீன ஆதரவாளர் வரவேற்பு
2024-06-26 11:34:44


ஜெர்மனியில் 2024ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகளவிலான ரசிகர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாண்டின் இப்போட்டியில் 13 உலக ஒத்துழைப்புக் கூட்டாளி நிலைக்கான ஆதரவாளர் நிறுவனங்கள் உள்ளன. இதில் 5 நிறுவனங்கள் சீன நிறுவனங்களாகும். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ப்புக்கான மிக அதிகமான ஆதரவாளர் நிறுவனங்களாக சீன நிறுவனங்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக விளங்குகின்றன.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போன்ற பெரிய போட்டிகள் சீன நிறுவனங்களை வரவேற்கின்றன. சீன நிறுவனங்களின் நிதி ஆற்றல், சீனாவில் புத்தாக்கத்தின் மூலம் முன்னேற்றப்படும் பொருளாதாரச் சீர்திருத்தம், உலகில் முன்னணியில் உள்ள புதிய அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவை பாராட்டப்பட்டுள்ளன. உலகில் செல்வாக்கு வாய்ந்த போட்டிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான ஆதரவாளர் நிறுவனங்கள், உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் போக்கைப் பிரதிப்படுத்த உலகளவில் செல்வாக்கு வாய்ந்த நிறுவனங்களாகும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.