தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா பதவி விலக வேண்டும்:ஜப்பான் லிப்ரல் ஜனநாயகக் கட்சி
2024-06-26 10:12:53

ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சரவைக்கான ஆதரவு விகிதம் குறித்து ஜப்பானின் மெயினிச்சி சிம்பன் Mainichi Shimbun நாளேடு 23ஆம் நாள் செய்தி வெளியிட்டது. 17 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சரவைக்கு ஆதரவளித்துள்ளனர். கடந்த திங்களில் இருந்ததை விட 3 விழுக்காட்டு ஆதரவு குறைந்தது. அமைச்சரவைக்கான ஆதரவில்லாத விகிதம் 77 விழுக்காடாகும். கடந்த திங்களில் இருந்ததை விட 3 விழுக்காட்டு ஆதரவு அதிகரித்துள்ளது.

தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா பதவி விலக வேண்டும் என்று ஜப்பான் லிப்ரல் ஜனநாயகக் கட்சியில் குரல் எழுப்பியுள்ளது. ஃபுமியோ கிஷிடா தொடர்ந்து தலைமையமைச்சராக பதவி வகிக்க மாட்டார் என்று விசாரணைபடுத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். குறைந்த ஆதரவு விகிதம் இருப்பதால், எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் ஃபுமியோ கிஷிடாவுக்கு எதிர்ப்புக் குரல் அதிகரித்து உள்ளது.