நீரிணை மன்றத்தின் சாதனைகள் பற்றி சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் அறிமுகம்
2024-06-26 11:10:55

சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் ஜூன் 26ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அதில் இரு கரை மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள 16ஆவது நீரிணை மன்றத்தில் என்ன சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். செய்தித் தொடர்பாளர் ஷூஃபுங்லியேன் இக்கேள்விக்குப் பதிலளிக்கையில், 16ஆவது நீரிணை மன்றம் ஜூன் 15ஆம் நாள் ஃபுஜியேன் மாநிலத்தின் சியாமென் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஏற்கனவே நடத்தப்பட்ட 35 நிகழ்ச்சிகளில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மேலும் 15 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெரும்பாலான தைவான் உடன்பிறப்புகள் இக்கருத்தரங்கில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்வது இரு கரை மக்களின் ஒன்றிணைப்பை இது வெளிக்காட்டியுள்ளது. 7000க்கும் அதிகமான தைவான் உடன்பிறப்புக்கள் சியாமெனுக்குச் சென்று இரு கரை மக்களின் உற்சாகமான பரிமாற்றத்தை மேற்கொண்டனர். மேலும், இரு கரை ஆரோக்கிய தொழிலின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கு, வணிக சங்கத்தின் வளர்ச்சிக் கருத்தரங்கு, வேளாண்மை மற்றும் கிராமத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கருத்தரங்கு, நிதிக் கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நீரிணை மன்றத்தின் போது நடைபெற்றன. இது தைவான் உடன்பிறப்புகள் சீனப் பாணி நவீனமயமாக்கலின் வளர்ச்சி வாய்ப்பைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.