ஜூலையில் நடைபெறும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு
2024-06-27 14:22:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு ஜூன் 27ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவது, சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றுவது ஆகியவை குறித்து ஆய்வு செய்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு ஜூலை 15முதல் 18ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.