பனாமா அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு விழாவில் சீனப் பிரதிநிதி
2024-06-27 15:35:45

பனாமா அரசின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவருக்கான சிறப்புத் தூதரும், சீனச் சுங்கத் துறையின் தலைமைப் பணியகத்தின் தலைவருமான யூச்சியன்குவா அந்நாட்டில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பனாமாவில் ஜூலை திங்கள் 1ம் நாள், நடைபெறும் பனாமா அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு விழாவில் அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மௌ நிங் அம்மையார் 27ஆம் நாள் தெரிவித்தார்.