சீனாவில் புதிய வளர்ச்சி வாய்ப்புகள்: தாவோஸ்
2024-06-27 15:53:51

புதிய உயர் தர உற்பத்தி திறனை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பயனுள்ள பல்வேறு கொள்கைகள் தொடர்ந்து வகுத்து வருவதோடு, பொருளாதார அதிகரிப்புக்கான வழிமுறை, இலக்குகள், நம்பிக்கை முதலியவை மீது அதிகமான நம்பிக்கை கொண்டுள்ளதாக 26ஆம் நாள் நடைபெற்ற 15ஆவது கோடைகால தாவோஸ் மன்றக் கூட்டத்தில் டெலோயிட் சீனா நிறுவனத்தின் துணை முதன்மைச் செயல் அலுவலர் லியூ மிங் குவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

25ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை, சீனாவின் டாலியென் நகரில் நடைபெற்ற கோடைகால தாவோஸ் மன்றக் கூட்டத்தில், உலகளவில் 100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 1700 அரசியல், வணிக துறையினர்கள் பங்கெடுத்தனர். இம்மன்றக் கூட்டத்தின் அளவு, கருத்தங்குகளின் எண்ணிக்கை, விருந்தினர்கள் எண்ணிக்கை ஆகியவை வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டின. சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து, வலிமையாக வளர்ந்து வருவதால், பல்வேறு நாடுகளின் நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன என்று பல விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 764 ஆகும். இது, கடந்த ஆண்டை காட்டிலும் 17.4 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், பல சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சீனப் பொருளாதார அதிகரிப்பின் மீதான மதிப்பீடுகளை முறையே அதிகரித்துள்ளன. சீனப் பொருளாதார வளர்ச்சியின் மீதான நம்பிக்கைகள் இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.