சீனப் பயணிகளுக்கு விசா விலக்கு கொள்கை: லாவோஸ் அறிவிப்பு
2024-06-27 19:21:07

லாவோஸ் நாட்டின் சுற்றுலா நிறுவனத்தின் வழியாக, சீனாவின் பெருநிலப்பகுதி மற்றும் சீனாவின் ஹாங்காங், மக்காவ், தைவான் பிரதேசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் 15 நாட்கள் வரை பயணிக்க லாவோஸ் முடிவெடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டு லாவோஸ் சுற்றுலா ஆண்டு குறிப்பிட்ட சுற்றுலா பயணிகளுக்கான விசா கொள்கை குறித்து அந்நாட்டு பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சர் ஜுன் 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை வரும் ஜுலை 1ஆம் நாள் முதல் அமலுக்கு வரவுள்ளது.