புதிய விண்வெளி திட்டங்கள் அறிமுகம் : சீனா
2024-06-27 19:19:51

சீனா ஜுன் 27ஆம் நாள் தனது புதிய விண்வெளி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சிறிய கோள் ஆராய்ச்சிக்காக, 2025ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு, தியன்வென்-2 விண்கலம் ஏவப்படும். 2030ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு, தியன்வென்-3 மற்றும் தியன்வென்-4 ஆகிய விண்கலங்கள் அடுத்தடுத்து ஏவப்படும். தியன்வென்-3 திட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படுவதுடன், தியன்வென்-4 திட்டம் மூலம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்டும்.