ஆசிய மக்களின் கருத்தில் அமெரிக்கா என்பது குழப்பம், போர்க்குணம் மற்றும் மேலாதிக்கம்
2024-06-28 15:04:01

குழப்ப உள்விவகாரம், தலையீடு மற்றும் போர்க்குணம், மேலாதிக்கம் ஆகியவை அமெரிக்காவை விவரிப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தும் சொற்களாக மாறியுள்ளன என்று சீன ஊடகக் குழுமம் சீன மக்கள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிய நாடுகளில் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அமெரிக்க சமூகத்தில் கடும் பிரச்சினையாக விளங்குவதாக 84.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவில் அமைப்பு முறையிலான இனவெறி பாகுபாடு நிலவுவதாக 75.4விழுக்காட்டினர் கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஏழை மற்றும் பணக்கார இடைவெளி நாளுக்கு நாள் தீவிரமாகுகிறது என்று 75.8விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், போதைப்பொருள் பரவல் அதிகமுள்ள நாடு அமெரிக்கா என்று 69.9விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.