பஞ்ச சீல கோட்பாடுகளுக்கு இணையப் பயன்பாட்டாளர்கள் பாராட்டு
2024-06-28 10:55:31

அரசு இறைமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு கொடுத்தல், ஒன்றுக்கு ஒன்று ஆக்கிரமிப்பு இன்மை, ஒன்று மற்றதன் உள் விவகாரங்களில் தலையிடாமை, சமத்துவம் ஒன்றுக்கு ஒன்று நலன் மற்றும் சமாதானத்துடன் கூடிய சக வாழ்வு ஆகிய கோட்பாடுகளை, 70 ஆண்டுகளுக்கு முன்பு சீனா முன்வைத்தது. இன்றைய நிலையிலும் இந்தக் கோட்பாடுகள் சர்வதேச அளவில் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்நிலையில் இக்கோட்பாடுகள் பற்றிய உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களில் 82 விழுக்காட்டினர் உலகின் அமைதியைப் பேணிக்காக்கும் முக்கிய ஆற்றலாக சீனா விளங்குவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 83.5 விழுக்காட்டினர் இக்கோட்பாடுகளைப் பெரிதும் பாராட்டியுள்ளனர். இக்கோட்பாடுகளில் இறையாண்மை, நீதி, ஜனநாயகம், சட்ட ஒழுங்கு முதலிய மதிப்பு மிக்க கருத்துகள் உள்ளதாகவும், மேலும் அருமையான உலகத்தைக் கட்டியமைக்க சீனா உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.