நிலவின் மண் மாதிரிகளின் எடை: 1935.3 கிராம்
2024-06-28 18:13:51

சீனாவின் சாங்ஏ-6 விண்கலம் நிலவின் பின்புறத்தில் இருந்து சேகரித்து பூமிக்கு கொண்டு வந்த மாதிரிகளின் எடை 1935.3 கிராம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜுன் 28ஆம் நாள் காலையில் நடைபெற்ற இந்த மாதிரிகளை ஒப்படைக்கும்  நிகழ்ச்சியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

மனித வரலாற்றில் நிலவின் தொலைதூரப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் முதல் மாதிரியாகவும், தனித்துவமான அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது திகழ்கிறது. இந்த ஆய்வு மூலம், சந்திரனின் உருவாக்கம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றை புரிந்து கொள்ள உதவுகிறது.