இந்தியாவின் 8 முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி மே மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரிப்பு
2024-06-29 17:06:54

இந்தியாவில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட 8 முக்கிய தொழில் துறைகள் கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டின் மே மாதம் 6.3 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டின் மே மாதத்தில், நிலக்கரி உற்பத்தி 10.2 சதவீதமும், மின்சார உற்பத்தி 12.8 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.5 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 0.5 சதவீதமும், எஃகு உற்பத்தி 7.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், சிமெண்ட் உற்பத்தி 0.8 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 1.1 சதவீதமும், உர உற்பத்தி 1.7 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.