ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டம் பற்றிய அந்நாட்டின் தற்காலிக அரசின் கருத்து
2024-06-29 17:55:21

ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டம் குறித்து, அந்நாட்டின் தற்காலிக அரசின் செய்தித் தொடர்பாளர் ஜுன் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். பிரச்சினையைத் தீர்ப்பது, ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசு இக்கூட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டம் ஜுன் 30 முதல் ஜூலை முதல் நாள் வரை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது என்று ஐ.நா முன்னதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தானுடன் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்படும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.