உலக வங்கியின் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி
2024-06-29 17:05:59

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டினார். அவர் கூறுகையில், 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா, உலகப் பொருளாதார அதிகரிப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி, உலகின் பிற நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.

அவரது கருத்தில், சீனாவுக்கும் உலக வங்கிக்குமிடையிலான ஒத்துழைப்பு, முன்மாதிரியாக உள்ளது. எதிர்காலத்தில், உலக அறைக்கூவல்களைச் சமாளிப்பது, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் தொடர்ந்து ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.