தொடரவல்ல வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றிய 2024ஆம் ஆண்டின் அறிக்கை
2024-06-29 17:29:24

தொடரவல்ல வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றிய 2024ஆம் ஆண்டின் அறிக்கையை ஐ.நா ஜுன் 28ஆம் நாள் வெளியிட்டது. இந்த இலக்குகளில், 17 விழுக்காடான பகுதி தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. சுமார் 50 விழுக்காடான பகுதி மிகவும் சிறிய அளவில் முன்னேற்றப்பட்டு வருகிறது. 30 விழுக்காட்டுக்கும் மேலான பகுதி தேக்க நிலையில் உள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, எரியாற்றல், சமூகப் பாதுகாப்பு, எண்ணியல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்றுவதற்கு, பெருமளவிலான முதலீடு மற்றும் பயனுள்ள கூட்டாளி உறவு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பரவல் துறையில் சர்வதேச சமூகம் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. ஆனால், கோவிட்-19 நோயின் பாதிப்பு தொடர்கிறது. மோதல்கள் தீவிரமாகி வருகின்றன. புவிசார் அரசியல் பதற்ற நிலையில் உள்ளது. காலநிலை இயல்பற்ற நிலையில் உள்ளது. இவை, தொடரவல்ல வளர்ச்சிக்கான இலக்குகளின் நடைமுறையாக்கத்தைத் தடை செய்துள்ளன என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.