ஆயுத மோதல்களில் அப்பாவி மக்கள் மீதான பாதுகாப்பு குறித்து ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள்
2024-06-29 19:11:01

ஆயுத மோதல்களில் அப்பாவி மக்கள் மீதான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பவை 28ஆம் நாள் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட தலைவர் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜெனிவா பொது ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஆயுத மோதலில் காணாமல் போன மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதில் ஐ,நா பாதுகாப்பவை கவனம் செலுத்துகிறது. ஆயுத மோதல்களில் அப்பாவி மக்கள் மீதான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள் விடுப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆயுத மோதல்களுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் அனைத்து உகந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, காணாமல் போன மக்களை ஆக்கமுடன் தேட வேண்டும் எனவும், ஆயுத மோதல்களால் குழந்தைகள் காணாமல் போன நிலைமையில் பல்வேறு தரப்புகள் பெரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள் விடுப்பதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி காணாமல் போனவர் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.