இஸ்ரேலின் திட்டத்துக்கு பல தரப்புகள் கண்டனம்
2024-06-30 20:06:16

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை 27ஆம் நாள் இஸ்ரேல் நிதி துறை அமைச்சர் முன்வைத்த ஒரு திட்டத்தை அங்கீகரித்தது. இத்திட்டத்தின்படி, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ஐந்து சட்டப்பூர்வமற்ற யூதர் குடியிருப்புகளை சட்டமயமாக்கி, பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனம் மீது மேலும் தடை நடவடிக்கை மேற்கொள்ளும். பாலஸ்தீனம், கத்தார், அரபு லீக் உள்ளிட்ட பல தரப்புகள் இத்திட்டத்தை வன்மையாக கண்டித்துள்ளன.

சுதந்திர பாலஸ்தீன நாட்டை நிறுவுவதைத் தடுப்பது இஸ்ரேலின் நோக்கமாகும் என்றும், சர்வதேச சமூகம் நடவடிக்கை மேற்கொண்டு, இஸ்ரேல் அரசின் ஒரு சார்பான சட்டப்பூர்வமற்ற நடவடிக்கையை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் 29ஆம் நாள் இஸ்ரேலின் தீர்மானத்தை வன்மையாக கண்டித்து, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறிய புதிய செயல் இதுவாகும் என்று தெரிவித்தது. சர்வதேச சட்டம் மற்றும் இரு நாடுகள் திட்டத்தைப் பின்பற்றும் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீன நாட்டை நிறுவுவதை ஆதரிப்பதாக கத்தார் மீண்டும் வலியுறுத்தியது.

அரபு லீக் தலைமைச் செயலாளர் கெய்த் 29ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இத்திட்டத்தைக் கண்டித்து, இஸ்ரேல் அரசு பிரதேச அமைதியை முன்னேற்றுவதில் ஆர்வம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.