புதிய யுகத்தில் பதில் அளிக்கும் சீனா
2024-06-30 16:58:16

70 ஆண்டுகளுக்கு முன், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் தேசிய இன சுதந்திரம் மற்றும் விடுதலை இயக்கம் அதிகமாக நடைபெற்றது. புதிதாக நிறுவப்பட்ட நாடுகள், அரசுரிமையைப் பேணிகாத்து, தேசிய இனப் பொருளாதாரத்தை வளர்க்க விருப்பப்பட்டன. பஞ்ச சீலக் கோட்பாடுகளை சீனத் தலைவர் முதன்முறையாக முன்வைத்து, நாடுகளுக்கிடையேயான உறவைச் சமாளிப்பதற்கு வரலாற்று பதில் அளித்தார்.

பஞ்ச சீலக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவுக்கான மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். தன் உரையில் இக்கோட்பாடுகளின் எழுச்சி உள்ளடக்கங்கள் மற்றும் யுகத்தின் மதிப்பை பன்முகங்களிலும் விவரித்து, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றிய கருத்து, புதிய சூழ்நிலையில் இக்கோட்பாடுகளுக்கான நல்ல கையேற்றல் மற்றும் பரவலாகும் என்பதை சுட்டிக்காட்டி, உலகின் தெற்கு பகுதி  பல்வேறு நாடுகளின் மக்களுடன் அதிசிறந்த எதிர்காலத்தை கூட்டாக உருவாக்கும் குரலை அவர் எழுப்பியுள்ளார்.

தற்காலத்தில் சர்வதேச சூழ்நிலையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம், உலகின் பலதுருவமயமாக்கம் மற்றும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் ஆழமாக வளர்ந்து வருகிறது. உலகின் தென் பகுதி மறுமலர்ச்சியடைந்து வருகிறது. உலக கட்டமைப்பு மற்றும் சர்வதேச ஒழுங்கு விரைவாக மாறி வருகிறது. மறு புறம், உலக பொருளாதார மீட்சி பலவீனமானது. உக்ரைன் நெருக்கடி மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தொடர்கின்றன. குறிப்பிட்ட வல்லரசு, பனி போர் சிந்தனையை மீண்டும் பின்பற்றி, வர்த்தக சர்ச்சையை எழுப்பி, மேலாதிக்கவாதத்தைக் கடைப்பிடித்துள்ளது. உலக மேலாண்மை முறைமை புதிய அறைகூவலைச் சந்தித்துள்ளது.

வரலாற்றின் திருப்பு முனையில் நின்று, பன்னாட்டு மக்களின் பொது மற்றும் அடிப்படை நலன்களை சீனா கருத்தில் கொண்டு, பஞ்ச சீலக் கோட்பாடுகளைப் பரவல் செய்யும் அடிப்படையில் மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றிய முக்கிய கருத்தை முன்வைத்தது. எந்த உலகத்தை கட்டியமைப்பது மற்றும் இந்த உலகத்தை எவ்வாறு கட்டியமைப்பதற்கு புதிய பதில் அளித்தது.

தறகாலத்தில் பொருளாதார ஆற்றல் மற்றும் உலக மேலாண்மையில் உலகின் தென் பகுதியின் ஆற்றல் மேலும் வலுவாக இருந்து, சர்வதேச விவகாரத்தில் மேலும் ஆக்கமுடன் பங்கெடுக்கிறது. உலகின் தென் பகுதியில் உள்ள உறுப்பினரான சீனா, உலகின் தென் பகுதியின் திறப்பு, இணக்கம் மற்றும் ஒத்துழைப்பு பற்றிய முன்மொழிவு முன்வைத்தது. மேலும் உலகின் தென் பகுதியின் ஒத்துழைப்பை ஆதரிப்பதற்கான எட்டு நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த நடவடிக்கைகள், திறமைசாலி பயிற்சி, இளைஞர்களின் பரிமாற்றம், பொருளாதார வளர்ச்சி, தாராள வர்த்தகம், வேளாண் ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், உயிரினச் சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை. உலகின் தென் பகுதியின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனாவின் மனவுறுதியை இது வெளிப்படுத்தி, தெற்கு தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தெற்கு-வடக்கு ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, மனித குலத்தின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கு புதிய உந்து சக்தியை ஊட்டியுள்ளது.