நலத்திட்ட பணிகளுக்காக இலங்கை 39 மில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவித்தது
2024-06-30 16:27:41

அஸ்வெசும நலத் திட்ட உதவியின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இலங்கை அரசு 39 மில்லியன் அமெரிக்க டாலர்  நிதியை  வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 495 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலில், பயனாளிகளுக்கான சிறப்பு நிதி வழங்கும் காலத்தை இவ்வருடத்தின் டிசம்பர் வரை நீடிக்குமாறு அந்நாட்டின் அரசு தலைவரான  ரணில் விக்ரமசிங்க நலத்திட்ட உதவிகள் துறைக்கு உத்தவிட்டுள்ளார்.

மிகவும் ஏழை மற்றும் ஏழை பிரிவினருக்கு தற்போதுள்ள கட்டண முறை மாற்றமின்றி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டில் ஏற்பட்டடும் பொருளாதார நிலை காரணமாக சுமார் 2.4 மில்லியன் குடும்பங்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்குவதை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.