தஜிகிஸ்தானில் சி.எம்.ஜி. ஆவணப்படங்கள் ஒளிபரப்பு தொடக்கம்
2024-07-01 10:57:37

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தஜிகிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு,  சீன ஊடகக் குழுமம், தஜிகிஸ்தானின் ஹோவல் தேசிய செய்தி நிறுவனம், சைனாமோ தொலைக்காட்சி நிலையம் ஆகியவை கூட்டாக நடத்திய சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு,  ஜுன் 30ஆம் நாள் முதல் தலைநகர் டுஷன்பேவில் துவங்கியது. ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு உள்ளிட்ட சிறந்த நிகழ்ச்சிகள், தஜிகஸ்தானின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்ஷியொங், தஜிகிஸ்தான் ஹோவல் தேசிய செய்தி நிறுவனத்தின் ரஷிய பிரிவின் தலைமை பதிப்பாசிரியர் பாடன்கோவா அம்மையார், தஜிகிஸ்தானுக்கான சீனத் தூதர் ஜீஷுமின் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரை நிகழ்த்தினர்.