எண்ணியல் சீனா எனும் வளர்ச்சி மேலும் வேகம்
2024-07-01 10:07:33

சீனத் தேசிய தரவு வாரியம் 30ஆம் நாள் 2023ஆம் ஆண்டின் எண்ணியல் சீனா பற்றிய வளர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இவ்வறிக்கையின்படி, கடந்த ஆண்டில், சீனாவின் எண்ணியல் பொருளாதாரத்திற்கான முக்கியத் தொழில் துறையின் அதிகரிப்பு மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காட்டை எட்டியுள்ளது. எண்ணியல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை அமைப்புமுறை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எண்ணியல் தொழில் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு விரிவாகியது.

இவ்வாண்டில், எண்ணியல் சீனா தொடர்பான கட்டுமானம், புதிய உயர் தர உற்பத்தி திறனை விரைவுபடுத்துவதுடன் இணைந்து முன்னேறி, தரம், செயல்பாட்டுத் திறன், பணி சீர்திருத்தம் ஆகியவற்றைத் தூண்டும் முக்கியக் கருவியாக மாறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.