ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது
2024-07-01 17:19:43

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்களுக்கான டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா, 125 கோடி ரூபாயை  பரிசாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்தின.  இதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்றன.

பார்படாஸில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17 வருட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

இந்தியாவில் பிரபல விளையாட்டா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை அடுத்து, கடந்த வெள்ளிக்கிமை இரவு நாடு முழுவதும் ரசிகர்கள் தெருக்களில் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் வெற்றியை கொண்டாடினர்.