முதல் 6 மாதங்களில் சீன விரைவஞ்சல் பொதிகளின் எண்ணிக்கை 8000கோடி
2024-07-01 11:01:13

சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களன்படி, நடப்பாண்டின் ஜூன் 30ஆம் நாள் வரை, சீன விரைவஞ்சல் பொதிகளின் எண்ணிக்கை 8000கோடியைத் தாண்டியது. கடந்த ஆண்டை விட, 59 நாட்களுக்கு முன்கூட்டியே இந்த எண்ணிக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு முதல் சீனாவின் விரைவஞ்சல் சந்தை தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு பொதிகளின் எண்ணிக்கை 1300கோடியைத் தாண்டியது. குறிப்பாக ஜூனில், இணைய வணிகங்களில் தள்ளுபடி உள்ளிட்ட சாதகமான காரணிகளால், நாள் ஒன்றுக்கு விரைவஞ்சல் பொதிகளின் எண்ணிக்கை 50கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.