ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பற்றிய சீனாவின் கருத்து
2024-07-01 17:28:00

கசகஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுக்கவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜூலை முதல் நாள் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 23 ஆண்டுகளாக, ஒன்றுக்கொன்று நம்பிக்கை, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிகத்தின் பல்வகைமை ஆகியவற்றை உறுப்பு நாடுகள் பின்பற்றி, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையைக் கூட்டாக முன்னேற்றி, பலதரப்பு ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, புதிய ரக சர்வதேச உறவு மற்றும் பிரதேச ஒத்துழைப்பின் முன்மாதிரியாக விளங்கியுள்ளன. அஸ்தானாவில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் போது, புதிய சூழ்நிலையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும், தற்போதைய முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்தும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ஆழமாக கருத்துகளை பரிமாற்றி கொள்ளவுள்ளார் என்றார்.

மேலும், இந்த உச்சி மாநாட்டுக்குப் பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2024-2025ஆம் ஆண்டு தலைமை பதவியை வகிக்கும் நாடாக சீனா பதவி ஏற்கும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இவ்வமைப்பின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் செழுமைக்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.