கஜகஸ்தானில் சி.எம்.ஜி. ஆவணப்படங்கள் ஒளிபரப்பு தொடக்கம்
2024-07-01 07:54:48

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொள்வதுடன், கஜகஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு,  சீன ஊடகக் குழுமம் தயாரித்த சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஜுன் 30ஆம் நாள் முதல் அந்நாட்டின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு, அற்புதமான தொழில்நுட்பம், செழுமை அடையும் வழி, 10 ஆண்டுகள் வளர்ச்சிக்கான திறவுகோல் உள்ளிட்ட ஆவணப்படங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை ஒளிபரப்பாகி வருகின்றன. இதன் மூலம் கஜகஸ்தான் மக்கள் சீனத் தேசத்தின் பண்பாடு மற்றும் கலை, வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.