சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் மூலம் அனுப்பப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரிப்பு
2024-07-01 19:42:01

சீனாவின் குன்மிங் சுங்கத் துறை வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், குன்மிங் சுங்கத் துறையின் கண்காணிப்பில், சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் அளவு 27 லட்சத்து 61 ஆயிரம் டன்னாகவும், அதன் மதிப்பு 926 கோடி யுவானாகவும் உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 28.6, 61.5 விழுக்காடு அதிகமாகும். மேலும், சீன-லாவோஸ் இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது முதல் இவ்வாண்டின் ஜுன் திங்கள் வரை, ஏற்றுமதி மற்றும் இலக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் அளவு 90 லட்சம் டன்னைத் தாண்டி, அதன் மதிப்பு 3702 கோடி யுவானை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.