இஸ்ரேல் மீதான மேலை நாடுகளின் பாராமுகம் குறித்து ஈரானின் குற்றஞ்சாட்டு
2024-07-02 09:58:02

ஈரான் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பஹத்ரி ஜூலை 1ஆம் நாளில், அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், காசா அப்பாவி மக்கள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி ஒழிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்வது, இஸ்ரேல் மீதான மேலை நாடுகளின் பாராமுகம் ஆகியவற்றின் மீது அவர் குற்றஞ்சாட்டினார்.

காசா அப்பாவி மக்கள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள், இனவெறி ஒழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாறாக, மேலை நாடுகளின் இழுத்தடிப்பது மற்றும் பாராமுகத்தால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து கொலைவெறித் தாக்குதலை நடத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.