இவ்வாண்டு உலக வர்த்தகத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு
2024-07-02 19:34:36

2024ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில், உலக வர்த்தகம் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கு அடைந்துள்ளது. வணிகப் பொருட்களின் வர்த்தகத் தொகை, 2023ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் இருந்ததை விட சுமார் 1 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தகத் தொகை சுமார் 1.5 விழுக்காடு அதிகமாகும் என்று ஐ.நாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு ஜூலை 2ஆம் நாள் தெரிவித்தது.

இவ்வமைப்பின் மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டு, உலகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் 3 விழுக்காடாக இருக்கும். சீரான வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டு உலக வர்த்தகத் தொகை 32 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும்.

மேலும், சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி அளவு அதிகரித்ததன் காரணமாக, இவ்வாண்டின் முதல் காலாண்டில் உலக வர்த்தகத் தொகை அதிகரித்துள்ளது. பசுமை எரியாற்றல் மற்றும்  செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் வர்த்தக அதிகரிப்பு காணப்பட்டுள்ளது என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.