பனாமா அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
2024-07-02 10:34:16

பனாமா அரசின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் தலைவருமான யியூ ஜியேன்ஹூவா ஜூலை முதல் நாள் பனாமாவின் தலைநகரான பனாமா நகரில் அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜோஸ் ரவுல் முலினோவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

முலினோவுக்கு ஷிச்சின்பிங்கின் மனமார்ந்த வாழ்த்துக்களை யியூ ஜியேன்ஹூவா தெரிவித்தார். பனாமாவுடன் இணைந்து அரசியல் துறையில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆழமாக்க சீனா விரும்புகிறது என்றும், சீன-பனாமா உறவின் தொடர்ச்சியான ஆழமான வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலும் நன்றாக நன்மை தர விரும்புவதாகவும் அவர் கூறினார்.