“நாகரிகங்களுக்கு இடையேயான உரையாடல்” என்னும் சிறப்புக் கண்காட்சி துவக்கம்
2024-07-02 17:49:08

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “நாகரிகங்களுக்கு இடையேயான உரையாடல்” என்னும் சிறப்புக் கண்காட்சி ஜூலை முதல் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் இத்துவக்க விழாவில் எழுத்து மூல உரை நிகழ்த்தினார். ஐ.நாவுக்கான பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஹங்கேரி, பொலிவியா, ஜமைக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள், தூதர்கள், பல்வேறு துறையினர்கள் முதலியோர் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.

எழுத்து மூல உரையில் ஷென் ஹாய்சியொங் கூறுகையில், நாகரிக உரையாடல் தினத்தின் உருவாக்கம் பற்றிய சீனா முன்வைத்த தீர்மானம், ஐ.நாவின் 78வது பொது பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவு, உலகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றதை இது காட்டியுள்ளது. சர்வதேச முன்னணியிலுள்ள புதிய ரக ஊடகமாக, சிந்தனை, கலை, தொழில் நுட்பம் ஆகியவற்றை சீன ஊடகக் குழுமம் ஒன்றிணைத்து, நாகரிக உரையாடல் பற்றிய கதைகளைச் செவ்வனே பரவல் செய்து வருகிறது. நாம் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கு ஞானம் மற்றும் திறனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.