சீனாவின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அறைகூவல் விடுத்த நேட்டோ
2024-07-02 19:10:45

நேட்டோ தலைமைச் செயலாளர் ஸ்டோல்டேன்பெர்க் சீனா பற்றி வெளியிட்ட கூற்றை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஜூலை 2ஆம் நாள் மறுப்பு தெரிவித்தார். சீனாவின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு நேட்டோ கடும் அறைகூவல் விடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மாவ் நிங் அம்மையார் கூறுகையில், நேட்டோவின் மதிப்பு கண்ணோட்டம் என்ன என்பதற்கு தெரியாது. உண்மையில் நேட்டோ சீனாவுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு, சீனாவின் உள்நாட்டு மற்றும் தூதாண்மை கொள்கைகளைத் திரித்து கூறியுள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உக்ரைன் நெருக்கடியை அரசியல் முறையில் தீர்ப்பதையும், நெருக்கடியைத் தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதையும் சீனா எப்போதும் ஆதரிப்பதாக வலியுறுத்தினார்.