சீனா செல்வாக்கு மிகுந்த நாடு:கணிப்பில் பங்கேற்ற 80விழுக்காட்டு பிரெஞ்சு மக்கள் கருத்து
2024-07-03 15:08:52

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் சீன மக்கள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிரான்ஸ் மக்களிடையில் நடத்திய கருத்துக் கணிப்பில், சீனா செல்வாக்கு மிகுந்த நாடு என்று 80.2விழுக்காட்டினரும் சீனா வெற்றிகரமான நாடு என்று 70.3விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், உயர் தரமான வளர்ச்சி மற்றும் உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பில் சீனா ஈட்டியுள்ள சாதனைகளுக்கு கருத்துக் இக்கணிப்பில் பங்கேற்பவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 91.5விழுக்காட்டினர் சீனப் பொருளாதார வளர்ச்சியின் சாதனைகளைப் பாராட்டினர். சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று 72.7விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.