சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளின் ஊடகங்கள் வட்ட மேசை பேச்சுவார்த்தை
2024-07-03 19:28:27

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24ஆவது கூட்டத்தை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலுள்ள நாடுகளின் ஊடகங்கள் வட்ட மேசை பேச்சுவார்த்தை ஜூலை 3ஆம் நாள் அஸ்தானாவில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசு அதிகாரிகள், முக்கிய ஊடகங்களின் பொறுப்பாளர்கள் முதலியோர், “ஊடகங்களின் ஆற்றலை ஒன்றிணைத்து, ஷாங்காய் எழுச்சியை வெளிக்கொணர்வது” என்பது குறித்து, ஆழமாக கருத்துகளைப் பரிமாறினர். ஊடகத் துறையில் சீனாவுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புகள் பெற்ற பெரும் சாதனைகளை அவர்கள் பாராட்டியதோடு, எதிர்காலத்தில், மேலும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மேலும் நெருங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்திய போது மூன்று முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, ஊடகங்களின் பரப்பு வழிமுறையைப் புதுமையாக்கி, பல்வேறு நாட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு வாய்ந்த தகவல்களைச் செவ்வனே பரவல் செய்ய வேண்டும். இரண்டாவதாக, ஊடகங்களின் பொறுப்பேற்று, நேர்மையான மற்றும் சீரான பொது கருத்து சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, ஊடகங்களின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீனாவுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பகிர்வை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சீன ஊடகக் குழுமம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, இப்பேச்சுவார்த்தையை வாய்ப்பாக கொண்டு, ஷாங்காய் எழுச்சியைத் தொடர்ந்து பரவல் செய்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சியை முன்னேற்றி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.