செயற்கை நுண்ணறிவின் உலக கூட்டு நிர்வாகத்தில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு 90விழுக்காட்டினர் ஆதரவு
2024-07-04 11:42:43

அண்மையில், 78ஆவது ஐ.நா பேரவையில் சீனா முன்வைத்த செயற்கை நுண்ணறிவுத் திறனின் கட்டுமானத்தை வலுப்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு உடன்படிக்கையில் 140க்கும் அதிகமான நாடுகள் கூட்டாக கையொப்பமிட்டன. உலகின் செயற்கை நுண்ணறிவுத் திறன் கட்டுமானத்தை முன்னேற்றுவதில் சீனாவின் முயற்சிகளைப் பெரும்பாலானோர் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டனர் என்று சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். உலக இணையவாசிகளிடம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மனித நலனை முதலிடத்தில் வைப்பது, சீரான நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது, மனிதகுலத்துக்கு நன்மை தருவது என்ற சீனாவின் கோட்பாடுகளை 89.72விழுக்காட்டினர் பாராட்டினர்.

இக்கருத்து கணிப்பு சி.ஜி.டி.என் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷியன் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது. 24மணிநேரத்திற்குள் மொத்தம் 9481 இணையவாசிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.