வங்காளத்தேசத்தின் தலைமையமைச்சர் சீனாவில் பயணம் பற்றிய சீனாவின் கருத்து
2024-07-04 16:44:45

வங்காளத்தேசத்தின் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜூலை 4ஆம் நாள் கூறுகையில், தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா, புதிய பதவி காலத்தில் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவருடன் சந்திப்பு நடத்தவுள்ளார். சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாரம்பரிய நட்புறவை ஆழமாக்குவது, பரஸ்பர நலன் ஒத்துழைப்பு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர் என்றார்.

மேலும், சீனாவும், வங்காளத்தேசமும் நல்ல நண்பராகவும், கூட்டாளியாகவும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டலுடன், சீன-வங்காளத்தேச நெடுநோக்கு கூட்டாளி உறவு தொடர்ச்சியாக ஆழமாகி வருகிறது. பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் செழிப்பான சாதனைகளைப் பெற்றுள்ளன. வங்காளத்தேசத்துடன் இணைந்து, இப்பயணத்தை வாய்ப்பாக கொண்டு, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தை முன்னேற்றி, மூன்று உலக முன்மொழிவுகளை விரைவாக செயல்படுத்தி, இரு நாட்டுறவை புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.