ஷிச்சின்பிங்-புதின் சந்திப்பு
2024-07-04 09:11:37

ஜூலை 3ஆம் நாள் இரவு, அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினைச் சந்தித்துரையாடினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில்,

இவ்வாண்டின் மே திங்களில், சீனாவில் அரசு முறை பயணத்தை புதின் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். சீன-ரஷிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு, இரு நாட்டுறவுக்கான அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து நாம் கூட்டாக திட்டமிட்டுள்ளோம். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், தலைமுறை தலைமுறை நட்புறவைத் தொடர்ந்து பரப்பி, இரு நாடுகளின் நியாயமான நலன்கள் மற்றும் சர்வதேச உறவில் அடிப்படை கோட்பாடுகளைப் பேணிக்காப்பதற்கு புதிய முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை இரு தரப்பும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். வெளிப்புற தலையீடுகளை எதிர்த்து, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.