உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் லீ ச்சியாங் கலந்து கொண்டார்
2024-07-04 18:45:11

2024ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலக மேலாண்மையின் உயர் நிலைக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூலை 4ஆம் நாள் ஷாங்காயில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு துறையின் புதிய தொழில் நுட்பங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து, புதிய தொழில் முறைகள் தொடர்ந்து தோன்றி, புதிய பயன்பாடுகள் விரைவாக விரிவாகி வருகின்றன. அவை புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில் சீர்திருத்தத்திற்கான முக்கிய உந்து சக்தியாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை சீனா பெரிதும் முன்னேற்றி, செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு மேலாண்மைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து, தொடர்புடைய பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தவிர உலக செயற்கை நுண்ணறிவு மேலாண்மை ஆலோசனை என்ற அறிக்கையை சீனா வெளியிட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு பல்வேறு நாடுகள் இது குறித்து ஆழமாக விவாதித்து, பொது கருத்தைத் திரட்ட வேண்டும். பல்வேறு நாடுகளுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு உலகின் வளர்ச்சிக்கு மேலும் செவ்வனே சேவை புரிந்து, மனித குலத்தின் நன்மையை அதிகரிப்பதை முன்னேற்றி, நுண்ணறிவின் மேலும் தலைசிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.