ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து மாநிலங்களுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை
2024-07-04 17:17:15

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு 8 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்நாட்டின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை ஒரு அறிவுறுத்தல் அறிக்கையை வழங்கியுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான நோய் தொற்று அறிகுறி பரிசோதனை, கருவின் வளர்ச்சியைக் கண்காணிப்பதில் மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை வலியுறுத்தியது.

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவக்கூடியது என்பதால் மருத்துவமனை வளாகங்கள் சுத்தமாக இருப்பதை கண்காணிக்க தனி அதிகாரியை நியமிக்குமாறும்,  குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கட்டுமான இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

கண்டறியப்பட்ட எந்தவொரு ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு குறித்த தகவலை உடனடியாக நோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்திற்கு (என்.சி.வி.பி.டி.சி) தெரிவிக்குமாறு அமைச்சகம் மாநிலங்களை வலியுறுத்தியது.