12.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பில் இலங்கை இணக்க நிலையை எட்டியுள்ளது
2024-07-05 17:34:02

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 37 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில், 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சர்வதேச கடன்கள்  மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அஅவர் நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய பகுதி ஆகும்.

இந்த மறுசீரமைப்பு விதிமுறைகளுக்கும், கடன் நிலைத்தன்மை இலக்குகளை மதிப்பிடுவதற்கும்  அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் அமைப்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்புதல் தேவைப்படுகிறது என்று சேமசிங்க கூறினார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பலப்படுத்துதலில் இது மற்றொரு முக்கிய மைல்கல்லாகும் என்று சேமசிங்க கூறினார்.