தஜிகிஸ்தான் செய்தி ஊடகங்களில் ஷிச்சின்பிங்கின் கட்டுரை
2024-07-05 14:15:36

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தஜிகிஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற வேளையில், அந்நாட்டின் செய்தி ஊடகங்களில் அருமையான எதிர்காலம் வாய்ந்த சீன-தஜிகிஸ்தான் உறவைக் கூட்டாக உருவாக்குவது எனும் பெயரிலான ஷிச்சின்பிங்கின் கட்டுரையை வெளியிட்டுள்ளன.

இக்கட்டுரையில் தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோலி ரஹ்மான் அழைப்பிற்கிணங்க, அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஷிச்சின்பிங்,  32 ஆண்டுகளுக்கு முன்பு, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டு இரு நாடுகளின் நட்புறவுக்கான புதிய அத்தியாயம் வைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 32 ஆண்டுகாலத்தில், இரு தரப்புறவு எப்போதும் நிதானமாகவும் சீராகவும் முன்னேற்றப் போக்குடன் வளர்ந்து வருகிறது. அதோடு, இரு தரப்புகளும் கையோடு கைகோர்த்து பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

எதிர்காலத்தில், உயர் நிலை ரீதியில், இரு தரப்பு உறவுக்கான வளர்ச்சி திசையை நிதானப்படுத்த வேண்டும். அதோடு, பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாட்டுறவுக்கான பொருள் அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளின் வளர்ச்சிக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கட்டியமைக்க வேண்டும். பண்பாட்டு பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, தலைமுறை நட்புறவுக்கான மக்களின் ஆதரவு அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். ஒன்றுபட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அமைதியான வளர்ச்சிக்கான சர்வதேசச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டுரையில் ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.