ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உயர்தர வளர்ச்சிக்கு வழிகாட்டலை வழங்கிய சீனா
2024-07-05 17:24:51

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 24ஆவது கூட்டமும், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு+” என்ற கூட்டமும் ஜூலை 4ஆம் நாள் அஸ்தானாவில் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பெறப்பட்ட பல சாதனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இந்த இரு கூட்டங்களில் கலந்து கொண்டார். “ஷாங்காய் எழுச்சியை” பின்பற்றி, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை, அமைதி மற்றும் நிலைத்தன்மை, செழுமையான வளர்ச்சி, சுமூகமான நட்புறவு ஆகியவற்றைக் கொண்ட பொது தாயகத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீனாவுக்கான கிர்கிஸ்தானின் முன்னாள் தூதர் பக்திகுலோவா அம்மையார் கூறுகையில், சீன அரசுத் தலைவரின் முக்கிய முன்மொழிவுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான சீனாவின் வழிகாட்டல் பங்கினை வெளிப்படுத்தியுள்ளன என்றார்.

23 ஆண்டுகளின் வளர்ச்சியுடன், தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், 10 அதிகாரப்பூர்வ உறுப்பு நாடுகள், 2 பார்வையாளர் நாடுகள், 14 பேச்சுவார்த்தை கூட்டாளி நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நடப்பு “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு+” என்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரதேச அமைப்பிலிருந்து, உலகளாவிய செல்வாக்கு வாய்ந்த முக்கிய ஆற்றலாக மாறியுள்ளதை இது காட்டியுள்ளது.

தற்போது உலக நிலைமையில் மாற்றங்கள் அதிகம். இதைச் சமாளிப்பதற்கு, சீன அரசுத் தலைவர் 5 முன்மொழிவுகளை வழங்கி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உயர்தர வளர்ச்சிக்கு சீனத் திட்டத்தை வழங்கியுள்ளார்.

ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பானது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெற்றி பெற்ற அனுபவமாகும். நடப்பு அஸ்தானா உச்சிமாநாட்டுக்குப் பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் நாடாக சீனா விளங்கும். பல்வேறு உறுப்பு நாடுகளுடன் மேலும் நெருங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது.