ஈரான் அரசுத் தலைவர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி
2024-07-06 17:00:08

ஈரானின் முன்னாள் சுகாதார அமைச்சரான மசூத் பெசெஷ்கியன் அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் ஜுலை 6ஆம் நாள் அறிவித்தது.

அரசுத் தலைவர் தேர்தலின் 2ஆவது கட்ட வாக்குப் பதிவில் 1 கோடியே 63 லட்சத்துக்கும் மேலான வாக்குகளை பெற்று அவர், ஈரானின் புதிய அரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

1954ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த பெசெஷ்கியன், ஈரானில் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். பல்கலைக்கழகத் தலைவர், சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றத்தின் முதல் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை அவர் வகித்தவர்.