ஷிச்சின்பிங்கின் மத்திய ஆசியப் பயணம் பற்றிய சீன வெளியுறவு அமைச்சரின் அறிமுகம்
2024-07-07 20:02:13

ஜுலை 2முதல் 6ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் பங்கெடுத்தைத் தொடர்ந்து, கசகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இப்பயண நிறைவைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இப்பயணம் பற்றி செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.

அவர் கூறுகையில்,

கோடைக்காலத்தில் அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மத்திய ஆசியாவில் பயணம் மேற்கொண்டார். இது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் சீன அரசுத்தலைவர் மத்திய ஆசியாவில் மேற்கொண்ட மற்றொரு பயணமாகும். இது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி திசைக்கு வழிகாட்டவும், பிராந்திய நாடுகளுடனான சுமுக நட்புறவை ஆழமாக்கவும், அண்டை நாடுகளில் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.