இந்தியாவுக்கான சீனத் தூதரின் வரவேற்பு விருந்து
2024-07-07 17:45:31

ஜுலை 5ஆம் நாள், இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் மற்றும் அவரது மனைவி தன் யூசியு ஆகியோர் புது தில்லியில் வரவேற்பு விருந்து நடத்தினர். இந்திய அரசு மற்றும் கட்சியினர், சிந்தனைக் கிடங்கு, ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளின் தூதரக அதிகரிகள், சீன நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 500க்கும் மேலான விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கான சீனத் துணை தூதர்கள் கொங் சியான்ஹுவா, சூ வெய் ஆகியரும் இதில் கலந்து கொண்டனர்.

சூ ஃபெய்ஹாங் உரைநிகழ்த்துகையில்

இந்தியாவுக்கான 17ஆவது சீனத் தூதராக, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கினால் நியமிக்கப்பட்டது மிகவும் பெருமை அளிக்கிறது. பதவியேற்ற பிறகு இந்தியாவின் பல்வேறு துறைகளுடன் பரிமாற்றம் மேற்கொண்டேன். இரு நாட்டுறவின் எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இரு நாட்டுத் தலைவர்களின் தொலைநோக்கு வழிகாட்டல் இந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சீன-இந்திய உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம்  அளித்துள்ளனர். போட்டியாளர் அல்லது அச்சுறுதலுக்கு பதிலாக, ஒத்துழைப்புக் கூட்டாளி மற்றும் வளர்ச்சி வாய்ப்பாக இரு நாடுகளும் இருப்பது என்ற ஒருமித்த கருத்தை அவர்கள் உருவாக்கினர். இது, இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக்கான நடைமுறைக்கு ஏற்ற தேவையும், இரு நாட்டு மக்களிடையே உறுதியான அடித்தளமும், இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் வழங்குகின்றன என்று சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்

சீன-இந்திய உறவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி, பருவமழை போல இயல்பாக வராது. இரு நாடுகளின் கூட்டு முயற்சி இல்லாமல் அது நடக்காது. சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகள். ஒரு பக்கத்தில் இருந்து மட்டும், இமயமலையின் முழு காட்சியை எவரும் பார்க்க முடியாது. உயரமான பகுதியில் நின்றால் தான், தொலைநோக்கு பார்வையுடனும், நம்பிக்கையுடனும்  இருக்க முடியும். கூட்டு முயற்சியுடன், இரு நாட்டு தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் குறிக்கோளைப் பின்பற்ற வேண்டும். மேலும் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்தி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். அத்துடன், கருத்துவேற்றுயை உரிய முறையில் கட்டுப்படுத்தி, பலதரப்பு ஒத்துழைப்பை நெருக்கமாக்குவதன் மூலம், சீன-இந்திய உறவை சீரான மற்றும் நிலையான பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று வலியுறுத்தினார்.

ஜுலை 5ஆம் நாள், இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் மற்றும் அவரது மனைவி தன் யூசியு ஆகியோர், புது தில்லியில் வரவேற்பு விருந்து நடத்தினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேலான விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.