சாலமன் தீவுகளின் புதிய தலைமை ஆளுநருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தி
2024-07-08 11:23:27

ஜூலை 8 ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சாலமன் தீவுகளின் புதிய தலைமை ஆளுநராகப் பதவியேற்றுள்ள டேவிட் திவா கப்புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், இந்த ஆண்டு சீனாவுக்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 5வது ஆண்டு நிறைவாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை தொடர்ந்து ஆழமாகி வருகிறது. நடைமுறை ஒத்துழைப்பு சாதனைகளைப் பெற்றுள்ளது. முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய அக்கறை கொண்ட பிரச்சினைகளில் இருநாடுகள் ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரித்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை வழங்கியுள்ளன. சீன-சாலமன் தீவுகளின் உறவின் வளர்ச்சியை நான் அதிக கவனம் செலுத்தினேன். சீன-சாலமன் தீவுகளின் புதிய யுக விரிவான நெடுநோக்கு கூட்டாளியுறவை ஒரு புதிய நிலைக்கு ஊக்குவிப்பதற்கும், இருநாட்டு மக்களுக்கும் நன்றாகப் பயனளிப்பதற்கும், திரு. கப்புடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.